பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

45



விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் காரணத்தால் சேர்த்துக் கொள்ள வேண்டியநிலை ஏற்படுகிறது. தமிழன் கடுமையைப் போக்க எளிய வேறு சொற்களை கையாளவேண்டி வந்துவிடுகின்றது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள பெரிய புகைவண்டி நிலையத்துக்கு, 'கோட்டை புகை இரதஸ்தானம் என்று விளம்பரம் போட்டிருக்கின்றார்கன். இதில் நிலையம், அல்லது இடம் என்பதற்குப் பதில் ஸ்தானம் என்று எப்படி புகுந்தது. அதேபோல், சிவிரி என்ற தமிழ்ச்சொல், விசிரி என்று மாறியிருக்கிறது. திருமண அழைப்பிதழ் என்ற அழகான தமிழ்ச் சொற்கள் இருக்க விவாக சுபமுகூர்த்த பத்திரிக்கை என்று எப்படி வந்தது. திருமணம் என்ற சொல் கலியாணமாக மாறியதேன், சில சொற்கள் மாறுவதால் அபாயம் அதிகமில்லை. ஆனால் சில சொற்கள் மாறுவதால் கருத்தும் மாறி அபாயத்தையும் தந்துவிடுகிறது. மேற்கோளாக:— திருமணம், என்பது கலியாணம் என்று மாறியிருக்கிறது, இல்லை. மாற்றப்பட்டிருக்கிறது. கலியாணம் என்ற சொல்லின் பொருள் என்ன. கலி—சனி, ஆணம்—பிடிக்கிறது என்பது பொருள். புதியதாக வாழ்க்கையின் இன்பத்தை நுகரவேண்டுமென்று ஆடை அணிகலன்களோடு வீற்றிருக்கும் மணமக்களைப் பார்த்து, உங்களுக்கு சனி பிடிக்கிறது என்று சொன்னால் அவர்கள் நிலை என்னாகும் என்பதை நீங்களே முடிவு கட்டுங்கள். இப்படி சொற்கள் மாறுவதாலே சில நேரங்களில் அபாயமும் அச்சமும் தோன்றிவிடுவதுமுண்டு. ஏன்? உனக்கு சனி பிடித்திருக்கிறது என்று ஒருவனைப் பார்த்துச் சொல்லும்போது, எந்த விதமான பயமுமில்லாமல் சுயேச்யையாக இருந்த அவனுடைய எண்ணத்தில், நமக்கு சனிபிடித்திருக்கிறதாமே. சனிபிடித்தால் இன்னின்ன கேடுகள் நிகழும் என்று ஜோசியர்கள் சொல்லுகிறார்களே என்றெல்லாம் அவன்