பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இலங்கை எதிரொலி


நினைக்கத்தொடங்கி அன்று முதல் அவன் செய்கை எவற்றிலுமே தெளிவில்லாமல், எதைக் கண்டாலும் பயப்பட்டுக் கொண்டு தன்னிலையிலிருந்துதானே வீழ்ந்துவிடுகிறான். இதைத்தான் ஆங்கிலத்தில் sycological effect என்கிறார்கள். ஆகவே தனித்தமிழில் பேச சில பொருள்கள் இடந்தருவதில்லை. புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான பொருள்களின் பெயரை தமிழாக்க தலைவரைப் போன்ற பேராசிரியர்கள் முயல்வார்கன் என்பது என் வேண்டுகோள். முன்பு பல தமிழ் அறிஞர்கள் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும், சொல்லாக்கல் மாநாடுகளை கூட்டி, ஆராய்ச்சி செய்து வந்தார்கள். பிறகு அந்த மாநாடுகள் கைவிடப்பட்டன. அந்த முயற்சி மாத்திரமன்னியில் பழைய தமிழ் இலக்கியங்களை எளிதாக்கி இன்றைய தமிழ் உலகம் எளிதாக தெரிந்துகொள்கிற நிலையை தமிழாசிரியர்கள் செய்துதர வேண்டும். ஏனெனில் இன்னும் எவ்வளவோ தமிழ் படித்தவர்களுக்கு, பற்றுள்ளவர்களுக்கு இலக்கியத்தைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுகிற அளவுக்குக்கூட அவைகளைத் தெரிந்துகொள்ளமுடியாமல் பலர் திண்டாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் மேற்கோளாக. அக நானூற்றில் ஒரு செய்யுள். யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம் முறைகேளீர். என்று பேசிக்கொள்கிறார்கள். இதன் பொருள் என்ன. என் தாய் யாரோ-உன் தந்தையும் எந்தவகையில் சுற்றத்தாரே தெரியாது, என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்வரும் இரண்டடிகளால், செம்மண்ணில் கலந்த மழை நீர்ப்போல நாம் இருவரும் கலந்துவிட்டோம் என்று மணமக்கள் முடிக்கின்றார்கள். இது ஒரு ஆசிரியருடைய உதவியில்லாமல் தெரிந்துக்கொள்வது மிகக் கடினமாகும். ஆகவே இதைப் மோன்றவைகளை எளிய வருங்கால தமிழகத்துக்கு நல்குவது வரவேற்கத்தக்கதும் வருங்கால் தமிழிளஞர்களுக்கு: அவர்கள் அளித்த நற்