பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

47



பரிசாகும். இந்த கருத்து தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. தெரிந்தும் ஏன் செய்ய முன்வருவதில்லை.

கடிளமான தமிழை எளிதாக்குவதன் மூலம் தமிழின் தரம் குறைந்துவிடும் என்று பயப்படுகின்றார்கள். ஒரு கட்டடச் சுவற்றில் சுண்ணாம்பு அடிப்பதனாலே உள்ளே இருக்கும் செங்கல் மறைந்துவிடுமே என்று பயப்படுவதைப் போன்றதாகும். தமிழை எளிதாக்குவதால் மூல நூலின் கண்ணியம் குறைந்துவிட முடியுமா? இப்போது எவ்வளவோ மூல நூல்களுக்கு எவ்வளவோ பேர்கள் அவரவர்கள் கருத்துப்படி உரை எழுதுகின்றார்கள் அதனால் மூலத்தின் உண்மை மறைந்து விடுவதில்லை ஆகவே பல நூல்களுக்கு பலர் உரை எழுதிக்கொண்டிருப்பதைவிட இந்த வேலையில் முயன்றால் வருங்காலம் அவர்களை உண்மையாக வணங்கியே தீரும்

அடுத்தது அரசியலைப்பற்றி பேசக்கூடாதென்று தலைவர் கட்டளைபிட்டது. தலைவருக்கும் உங்களுக்கும் எனக்கும் நன்றாக நினைவிருக்கின்றது. அவர் விருப்பப்படியே நான் அரசியலைத்தொடஎண்ணவில்லை. நீங்களும் விரும்பாதீர்கள். தலைவரும் விரும்பவில்லை. ஆனால் அரசியல் நம்மையறியாமலே, நாம் குழந்தைகளாகப் பிறந்த இரண்டு திங்களுக்குள்ளாகவே தொட்டுவிட்டது. நாம் பிறந்த சிறிது நாட்கள்வரை நம்மைப்பற்றி நமது பெற்றோர்கள் அரசாங்கத்திற்கு சொல்ல மறந்து விட்டார்கள். பொறுத்துப் பார்த்தது அரசாங்கம்! தகவல் கிடைக்கவில்லை. இறுதியாக ஒருஅதிகாரியை அனுப்பியது. அதிகாரியும் நம் வீட்டுக்கு வந்தார். உங்கள் வீட்டில் இரண்டு திங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்ததா ? என்றார். ஆம் என்றனர் பெற்றோர்கள். ஒத்தைக் குழந்