பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இலங்கை எதிரொலி



தையா, இரட்டைக் குழந்தைகளா, என்று அடுத்த வினாவை போட்டார். ஒத்தைக் குழத்தை என்று விடையளித்தனர். ஆணா, பெண்ணா என்று அதிகாரிகேட்டார் ஆண் என்றார் தந்தை. இவ்வளவும் குறித்துக்கொண்டு, காலாகாலத்தில் இந்த செய்தியை நீங்கள் அரசாங்க பிறப்பு வளர்ப்புப் பதிவு அதிகாரிக்கு அறிவிக்காததால் குற்றவாளியாகின்றீர்கள். ஆகவே இரண்டு ரூபாய்களை அபராதம் செலுத்த வேண்டிவரும், என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாம் குழந்தைகளாக இருந்தபோதே நம்மை அரசியலார் தமது ஆளுகையின் ஒரு அங்கம் ஆக்கிவிட்டனர். இப்போது அரசியலைப் பற்றி நாம் கவலைப்படாமலிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப்பற்றி அரசாங்கம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏன்? நான் கொழும்பில் வந்திறங்கியது முதல் இன்று வரை இனி நான் என் தாயகம் திரும்பும் வரை ஒரு சர்க்கார் நண்பர் என்னைத் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கும் எனக்கும் நேரடியான நட்போ பகைமையோ எதுவுமில்லை. ஆனால் நான் இந்த நாட்டு அரசியலின் விருந்தாளி என்ற முறையில், ஆங்காங்கே விருந்தை உண்கிறேனா, அல்லது நானேவிருந்தையளிக்கின்றேனா, அந்த விருந்தில் விஷத்தைக் கலந்துவிடுகின்றேனா என்று கண்காணிப்பதற்காக பல தொல்லைகளுக்கிடையே வந்து கொண்டிருக்கின்றார். அவரடையும் தொல்லையை பார்த்து எங்கள் வழியில் சிறிது பங்கிட்டு அளிக்கலாமா என்று நினைத்தால், அவர் தன் கடமையுணர்ச்சியின் காரணத்தாலும், அவர் எங்களோடுசேர்ந்து வருவதன் மூலம் சர்க்கார் தவறாகக்கருதுமென்ற காரணத்தாலும் மறுத்து விடுகிறார். அவருடைய தலை சாயாத கடமைக்காக நன்றி செலுத்துகிறேன். ஆகவே குழந்தையாக இருந்தபோது தொடர்ந்த அரசியல் சுடலைக்குப்