பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

II


அம்பலப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால்.நம்மை ஆவலோடு எதிர்கொண்டழைக்க ஏற்பாடு செய்திருந்த நமது இலங்கைத் தோழர்கள் ஏமாற்றத்திற்குப் பிறகு இயற்கையாக ஏற்படும் வீர உணர்ச்சிக்கீடாக எம்மவர் இங்குவர எவ்வளவு தொகைவேண்டும் என்று அதட்டிக்கேட்டனர்

இருநூறு, வெண் பொற்காசுகள் தரவேண்டும் என்றனர் அச்சாரமாக. அதே நாளில் கட்டி செய்தியை ஆகாயமூலம் அறிவித்தனர்.

ஒருவாறு முடிந்தது. இனி இருக்கும் வேலை, நமது இயக்கப் பொதுச் செயலாளரான அறிஞர் அண்ணாவைக் காணவேண்டியதுதான் என 5—4—53ல் சென்னை சென்றேன் முன் அறிவிப்போடு. இயக்க வேலையாக வெளிநாடு செல்பவர்கள் இயக்கத் தலைவரைக் காண்பதும், உரிமை பெறுவதும் சட்டமா சம்பிரதாயமா என்ற ஐயமே எனக்கெழவில்லை. காரணம் இதற்குமுன் யாரும் சொல்லாததால்.

எப்படியிருந்தாலும் ஒரு அரசியல் நெருக்கடியில் இருக்கும் வேற்றுநாட்டுக்குச் செல்லும் இயக்கத்தாருக்குள்ள பணியைப்பற்றி அலசி ஆராய்ந்து பார்த்துக்கொண்ட பிறகே செல்வது சாலச் சிறந்ததென எண்ணினேன். அதன்படியே அண்ணாவை அணுகினேன். தனியாக அமர்ந்து பலவற்றை பரிசீலித்தோம். அவருடைய அரிய யோசனை தான் எல்லா கட்சித் தலைவர்களையும், இந்தியத் தூதுவரைக் கண்டதும், பித்தமரைக் காண ஏற்பாடு செய்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலங்கை_எதிரொலி.pdf/6&oldid=1318672" இலிருந்து மீள்விக்கப்பட்டது