பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

இலங்கை எதிரொலி


52 இலங்கை எதிரொலி மனிதனின் இயற்கைக் குணமாயிருக்கிறது. ஆனால் நீங்கள் அதற்கு முற்றிலும் மாருக, நீங்களே அன்ருடம் தொழுது, ஓய்ந்த நேரத்தில் பழுது பார்த்துக்கொண்டு இருக்கும் ஒன்றைப்பற்றி எழும் தர்க்கவாதத்தைத் தாராளமாக அனுமதித்திருக்கின்றீர்கள். இது எல்லா இடத்திலும் எளிதாக நடக்கக் கூடியதல்ல, ஆகவே எனது இலங்கை சுற்றுச்செலவில் மறக்க முடியாத ஊர் காவலபிடியா என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு சொல்விக்கொள்ளுகின்றேன். முதலில் இராமாயணத்தைப்பற்றி எடுத்துக்கொள்வோம். இராம-அயனம் என்ற இரு சொற்புணர்வின் அடிப்படையிலே எழும்பிய வார்த்தை, இராம-இராமனுடைய, அயனம்-கதை, இராமனுடைய கதை என்பது தான் இதற்கு நேரடியான பொருள். கதைகள் பெரும் பாலும் கற்பனே என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகிறோம். இல்லையானல் இராம சரிதம் அல்லது வரலாறு என்றிருக்க வேண்டும். இராம வரலாறு என்பதைத்தான் இராம கதை என்று சொல்லுகிற்கள் என்று உங்களில் யாராவது சொல்ல முன் வந்தால், அப்படிச் சொல்ல நினைக்கின்றவர்களேயே வரலாற்றுக் கண்ணுடியை அணிந்துகொண்டு இந்த இலங்கையைச் சுற்றி வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். இராமாயணத்தின் பிற்பகுதி முழுவதிலும் இலங்கை என்ற பெயரே அடிபடுகிறது. ஆனால் இலங்கையில் இராவணன் மாளிகை இருந்த இடம், போர்க்களம், அவன் உலவிய தங்க மாளிகை, ஆகிய எதற்கும் எந்த ஆதாரமும், சின்னங்களுமில்லை. சிதை யின் கண்ணிர், இராமனின் செங்கண், வானரங்களின்