பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

இலங்கை எதிரொலி


“ குந்தி! நமக்குப் புத்திரர்கள் இதுவரை இல்லை. ஆகையால் நான் ‘புத்’ என்னும் நரகத்துக்குப் போக வேண்டி வருமே என்று பயப்படுகிறேன். நானும் உன்னைத் தொடக்கூடாது, தொட்டால் என் தலை இரண்டாயிரம் சுக்கல்களாய்விடும் என்பதும் நீ அறியாததல்ல. ஆகவே நான் உன்னைத் தொடுவதற்கில்லை. ஆகவே நான் உன்னைத் தொடாமல், எப்படியாவது, எங்கு சென்றாவது, சாமர்த்தியமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கெஞ்சுகிறான். அவன் வேண்டுகோளின்படியேதான், அவனுக்குத் தெரிந்தே சந்திரனிடமும், சூரியனிடமும், வருணனிடமும், இந்திரனிடமும் கலவி செய்து ஐவரைப் பெற்றாள். ஆறாவது ஒருவனையும் குந்தியே பெற்றெடுத்து (கண்ணனை) பெட்டியில் வைத்தனுப்பிவிட்டாள் என்று பாரதக்கதை செப்புகின்றது, . மாமியாரின் பரம்பரைக் குணம் தவறாமல் மருமகளும் (திரௌபதி) ஐந்து பேர்களைத் திருமணம் செய்துகொண்டு, ஆண்டுக்கொருவரை அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது: அதனாற்றான் தங்கள் கண்ணெதிரிலே, தங்கள் மனைவியை, மாற்றான் அவைக்களத்திலே அவமானப்படுத்துகிறபோது, எனக்கென்ன-உனக்கென்ன என்பதைப்போல, ஒருவனுக்காவது வீரம், அவமானம், கோபம் இல்லாமல், எல்லாரும் களிமண் உருண்டைகளென பாண்டவர்கள் ஐவருமே இருந்துவிட்டனர். ஒருவன் ஐந்து மனைவிகளைக் கட்டிக்கொள்வதும், ஒருவள் ஐந்து கணவன்களைக் கட்டிக்கொள்வதும் எவ்வளவு அபாயம் என்பதை, பாரதம் சுட்டிக் காட்டுவதா யிருக்கின்றதே தவிர, ஒழுக்கம் என்பதற்கு அதிலே எங்கே இடமிருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்-