பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

இலங்கை எதிரொலி


ஏற்பட்டது தான் அறிவுப் புரட்சி. அதைவிட மேலாக தன் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே ஒப்புக் கொண்ட நிலையிலிருந்த மனிதன் ஒவ்வொரு நிகழ்ச்சியின் காரண காரியங்களைக் கண்டறிய தலைப்பட்டான். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. மரத்திலிருந்து பழம் ஏன் கீழே விழ வேண்டும், அப்படியே ஆகாயத்தை நோக்கி ஏன் மேலே போகக்கூடாது. பழம் மாத்திரம் தான் கீழே விழுமா, மற்ற பொருள்களும் கீழே விழுந்து விடுமா, கனமான பொருள்கள் மட்டிலும் கீழே விழுமா, இலேசான பொருள்களும் கீழே விழுமா என்பதை சிந்தித்து செயலில் பரிசோதித்துப் பார்க்கும்போது எல்லாமே கீழே விழுந்தன. அதிலிருந்துதான் நிலத்துக்கு இழுக்கும்வண்மை இருக்கின்றதென்று கண்டு பிடித்தான்.

நீராவியால் கீழே தள்ளப்பட்ட தட்டைப்பார்த்துக் கொண்டவன், ஏன் நீராவியின் மூலம் பெரிய சக்தியை நெட்டித்தள்ளக்கூடாதென்ற முடிவுக்கு வந்து நீராவியந்திரத்தைக் கண்டுபிடித்தான். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் கண்டான். நாம் ஏன் இதேபோல் ஏதாவதொரு வாகனங்களைச் செய்து பறக்கக்கூடாதென்று கருதினான். அதன்படியே அவன் செய்தும் முடித்தான். காலத்தின் கணக்கை ஒரு சிறிய கெடிகாரத்தில் அடக் கினான். மழையின் அளவு, காற்றின் கனம், வெப்பத்தின் கொடுமை எல்லாவற்றையுமே தன் அறிவாற்றலால் அளந்து பார்த்துவிட்டான். எப்போது புயல் வரும் எங்கிருந்தும் கிளம்பும், எந்த திசை நோக்கி வரும் என்பதையறிந்து முன்கூட்டியே உலகத்துக்கு அறிவித்து விட்டான். நிலத்திலும், நீர்வீழ்ச்சியிலும் மின்-