பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

63


சாரத்தைக் கண்டு உலகத்தையே ஜோதிமயமாக்கினான். யார் எங்கே பேசினாலும், பாடினாலும் அது எத்தனை ஆயிரம் மைல்கள் தூரமாயிருந்தாலும் தன் வீட்டு அறையிலேயே உட்கார்ந்தபடி கேட்டுக்கொள்ள வசதி செய்து தந்தான் விஞ்ஞானி. இருப்பவர் மாத்திரமல்ல, இறந்தவர் குரலை இன்னும் நாம் கேட்கும் அளவுக்கு விஞ்ஞானத்தை மேலோங்கி வைத்தார்கள் மேதைகள். அதனால்தான் மடமை உலகத்துக்கு இருளைத் தந்தது, விஞ்ஞானம் வெளிச்சத்தை தந்தது என்கிறோம். விஞ்ஞானம் மதக்கோட்பாடுகளுக்கு விரோதமாக இருக்கின்றது என்று வாதாடுகின்ற மதத் தலைவர்கூட மின்சார விளக்குகளின் முன்னால், மின்சார விசிறிகளின் கீழே நின்றுகொண்டு, வாதாடுகிறார்கள். அதிலும் பெரிய வேடிக்கை, இடையே மணியோசை டெலிபோனைக் கையில் எடுத்துக்கொள்கின்றார்கள், தந்தியடிக்கச் சொல்லுகின்றார்கள். இவ்வளவு. கூத்துகளும் அவர்கள் பழமைக்குப் பெருமை தந்து பேசும்போது நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக அவர்கள் வெட்கப்படுவதுமில்லை. பழமைக்கு வந்த புதிய ஆபத்து என்று வேதனைப்படுவதுமில்லை. மாறாக மகிழ்ச்சியோடு அவற்றின் பலன்களை அனுபவிக்கின்றார்கள். அதை நாம் தவறென்று சொல்லவில்லை. எந்தெந்த புதிய கண்டுபிடிப்புகள் மனிதனின் உழைப்பைக் கூடுமானவரை குறைத்து வசதியைத் தந்ததோ அதேபோல் மனிதனின் அறிவுக்கும் நாம் மதிப்புக் கொடுத்துத்தீர வேண்டும். மேற்சொன்ன அறிஞர்கள் விஞ்ஞானிகள் அனைவருமே அறிவை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டில் நிறுத்தாமல், ஒரு குறிப்பிட்ட கொள்கை கோட்பாடுகளிலேயே சுழன்று வராமல், இதை சிந்திப்பது