பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இலங்கை எதிரொலி


பாவம், இதைப்பற்றி வாதாடுவது நரகம் என்றெல்லாம் நினைத்து அவர்களுடைய அறிவு பெருக்கத்துக்குத் தடை விதித்திருந்தால் நாம் இவ்வளவு அதிசயப் பொருள்களைக் காணவே முடியாது. அவர்களை மதவாத உலகம் தூற்றியது. சிலரை சிறையில் தள்ளியது. ஏன்? சிலரை நடுத்தெருவில் தீயிட்டுக் கொளுத்தியது. தூக்கிலே மாட்டியது. இதைக் கண்டு புது உலகம் வருந்துகிறது. எனினும் பழைய உலகத்தின் அறியாமையை எண்ணி எண்ணி வருந்துகிறது. சமூக மேன்மைக்காக உழைத்தவர்கள் சண்டாளர்களெனத் தூற்றப்பட்டனர். எனினும் கடந்த காலத்தின் கொடுமையை மறந்து புது உலகத்தில் நடமாடுகிறோம். புது உலகத்தின் கல்வி நம்மை பழைய உலகத்துக்கு அழைத்துச் செல்வதாயிருந்தால் அந்த கல்வியை நாம் விரும்பி படிப்பதைவிட கல்லாமலே விட்டுவிடலாம். ஏனெனில் அதனால் ஏற்படுவது வீண் பொருள் நஷ்டமும் நேர நஷ்டமும் தவிர வேறொன்றுமில்லை. புது உலகம் நமக்களித்திருக்கின்ற பரிசு, உண்மையின் அடிப்படை மீதே நாம் எதையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது.

இந்தப் புது உலகம் எதை எதைக் கடந்து வந்திருக்கின்றது. உலகம் முழுதும் அக்கினிப்பிழம்பாய் நட்சத்திரங்கள் சூழ்ந்த சூரியனின் வெப்பத்தால் உருகிய உலகத்தைக் கடந்து, பார்முழுதும் பாறைகளால் மூடப்பட்டிருந்ததைக் கடந்து, எல்லாம் ஆண்டவன் விட்ட வழி, நீ ஏதும் செய்யத் தகுதியற்றவன், உன்னால் என்ன செய்ய முடியும் என்றழைத்த ஏளனத்தை அறிவீட்டியால் குத்திச் சாய்த்த பிறகு, இவைகளுக்கிடையே எத்தனை இரவுகள். எத்தனை பகல்கள் கழிந்திருக்