பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

65


கின்றன என்பதை நம்மால் கற்பனையும் செய்து பார்க்க முடியாது.

'இயற்கை அவசரக்காரியல்ல, காலத்தை வீணாக்கவும் முடியாது. இழக்கவும் முடியாது. எதிர்காலம் விலையுயர்ந்ததாய் காட்சியளிக்கிறது. முன்பு எப்படி இருந்ததோ அப்படியல்ல, எப்படியிருந்திருக்க வேண்டுமோ அப்படி காட்சியளிக்கின்றது. எல்லையற்ற இயற்கைக்கு இலாபமும் தெரியாது, நஷ்டமும் தெரியாது. உலகின் வரலாறு, மனித குலத்தின் வரலாறு, ஓரளவு நமக்குத் தெரியும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பழைய உலகிலே மனிதன் தேவைக்கும் போருக்குமிடையே, பஞ்சத்திற்கும் கொள்ளை நோய்க்குமிடையே, அறியாமைக்கும் குற்றத்திற்குமிடையே, அச்சத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே போராடியுள்ளான், வாழ்ந்துள்ளான் என்பது நமக்குத் தெரியும் என்றும்'

குற்றமற்ற போப்பாண்டவர்கள், எண்ணிறந்த குருமார்கள்,புரோகிதர்கள், மன்னர் மன்னர்கள், நாட்டின் நாயகர்கள் ஆகிய அத்தனை பேரும், அறிவற்ற காட்டுமிராண்டிகளின் கற்பனையை எல்லையற்ற ஈசனின் ஞானோபதேசம் என்று தவறுதலாக கருதிக்கொண்டிருக்தார்கள் என்பதும், நமக்குத் தெரியும், என்கிறார் இங்கர்சால்.

அதைப்போல் காலம் பல மடமைக் கடலைக் கடந்து. இந்த அளவான புது உலகத்துக்கு வந்திருக்கின்றது. இதுவே முடிவான புது உலகம் அல்ல. இனி வரும் உலகம் எத்தன்மையதாயிருக்கும் என்பதையும் நாம் சிந்திக்கக்கூட முடியாத நிலையில், உள்ளோம். எது