பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இலங்கை எதிரொலி


எப்படியாயினும் இதுவரை சமுதாயம் பெற்ற நன்மைகளின் ஆசையால் மேலும் மேலும் வரப்போகும் புதிய கருத்துக்களையும், புதிய பொருள்களையும் கண்டிப்பாக வரவேற்றே தீரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் புதுமையை அந்த அளவுக்கு சுவைத்திருக்கிறது என்பதை நீங்களறிவீர்கள்.

மாணவர்களுக்கு ஏற்படுகிற பல அபாயங்களில் தலையானது சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாததுதான் முதல் அபாயமாகும்; ஏனெனில் ஒருவனை சாகடிக்கும் நஞ்சு முதலில் அவன் உள்ளத்தில் ஏற்படுகிற சந்தேகமும் அச்சமும்தான். பிசாசுகள் என்பது ஒரு கற்பனை வார்த்தை என்ற முடிவுக்கு வந்துவிட்டவன் இரவில் எந்த நேரத்திலும் எங்குவேண்டுமானாலும் போகிறான். பிசாசு ஒன்றிருப்பதாக உண்மையாகவே நம்பிக்கொண்டிருப்பவன் கும்பிருட்டில் போக அஞ்சுகிறான். அப்படியே போனாலும், காற்றால் மரக்கிளைகள் அசைந்தால் 'பிசாசு' என்ற சந்தேகமும் அச்சமும் கொள்கிறான். அதனால் நோய்வாய்ப்படுகிறான். அதுவே அவனுக்கு மரணமாக முடிகிறது. இது ஒரு குறிப்பிட்ட நாட்டில்தான் என்றில்லாமல் எல்லா நாட்டிலும் இருந்ததுதான். ஆனால் மேனாட்டில் அறிவு பெருகப் பெருக ஆற்றல் உயர இந்த கோட்பாடுகள் தொலைந்து புது உலகம் காணத்தலைப்பட்டது. பொதுவாகவே அறிவுப்புரட்சி எந்த நூற்றாண்டில் தொடங்கியது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத வகையில் நூற்றாண்டுக்கு ஒருவர் இருவராக இயேசுவுக்கு முன்பே தோன்றியிருக்கின்றார்கள். அந்த அறிஞர்கள் தோற்றுவித்த அறிவுப்புரட்சி சங்கிலித் தொடர்போல் இதுநாள் வரையிலும்