பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

67


தொடர்ந்து வந்திருக்கின்றது. இனியும் நாம் எண்ணும், இன்று நமது கற்பனை இது என்று அனாசியமாக ஒதுக்கித் தள்ளிவிடக்கூடியவைகள் நாளை உண்மையாய் விடவும்கூடும். ஆகவே பழைய உலகத்திலிருந்து புது உலகத்திற்கு வடத்தால் இழுக்கப்பட்ட நாம், அல்லது நம் பின் சந்ததிகள் எந்த இடத்துக்குப்போய்ச் சேருவோம் என்பதை முடிவுகட்ட முடியாமல், நாளுக்கொரு வினோத பொருளும் வினாடிக்கொரு கண்டுபிடிப்பும் நம் முன் தோன்றியவண்ணம் உள்ளன. இந்தப் புது உலகம்தான் முடிவானதென எண்ணாமல், இனி வரும் புது உலகம் நம்மை எல்லா வகையாலும் மகிழ்ச்சியடையச் செய்யும் என்பதிலும், அப்படி ஏற்படுகிற மாறுதலுக்கு மாணவர்களாகிய நீங்களே காரணமாக வேண்டுமென்ற கருத்தோடு, மறுமலர்ச்சி விரும்பிகளாய், அறிவின் பொக்கிஷங்களாய், ஆற்றலின் குன்றுகளாய்த் திகழ்ந்து, இனி வரும் அதிதீவிர விஞ்ஞான உலகத்துக்கு நீங்கள் வழிகாட்டிகளாய் விளங்கி, உங்களுக்காகப் பாடுபட்ட, உங்கள் முன்னேற்றத்துக்காகப் போதிய வசதிகளை மட்டுப்படுத்திக்கொண்டு வாழ்ந்த உங்கள் பெற்றோர்களிடம் நன்றியும் அன்பும். உங்கள் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அன்பும் மரியாதையுமாக நடந்து, சண்டை சச்சரவுகளில்லாமல், உடன் படிக்கும் மாணவர்களிடம் நேசப்பான்மையோடு வாழவேண்டும் என்று உங்களைப் பணிவாகக் கேட்டுக்கொண்டு, எனக்கு இங்கே பேச வாய்ப்பளித்த கல்லூரித் தலைவருக்கும். ஏனையோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, என் சிற்றுரையை முடிக்கின்றேன். வணக்கம்.