பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

69


செய்துகொண்டால் குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கலப்பு மணத்தின்மூலமாவது வாழ்வு கிடைக்காதா என்று நினைத்த பலர் அப்படியும் செய்ய முன்வந்தார்கள். அதன் பிறகும் சர்க்கார் அவர்களுக்கு உணவளித்ததாகத் தெரியவில்லை. பிறகு தமிழ் தோழர்களைத் திருமணம் செய்து கொண்ட சிங்களப் பெண்கள் சட்டசபைக்கே நேராகப் போய், எங்களுக்குமாத்திரம் அரிசி ரேஷன் வழங்கியிருக்கின்றீர்களே! ஏன் எங்கள் கணவன்மார்களுக்கு ரேஷன் இல்லே என்று கேட்டபிறகு, ஆண்களுக்கு ரேஷன் வழங்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். ஒரே குடும்பத்தை நடத்துகிற பெண்ணுக்கு உணவு உண்டு. ஆணுக்கு உணவும் இல்லை. உரிமையில்லை என்று சொல்லியதால், நம்முடைய கெதியே இப்படியாய்விட்டதால் நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன கெதி நேருமோ என்று, பலர் குடும்ப வாழ்க்கையிலே ஈடுபடாமல் நின்றுவிட்டார்களோ என்னமோ என்று சந்தேகப்படுகிறேன். (சிரிப்பு). மற்ற நாட்டார்கள் இங்கே வங்து கலவரம் உண்டாக்குகின்ருர்கள் என்று குற்றம் சுமத்துகிற சர்க்காரே இப்படி ஒரே குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறதே, இதற்கு என்ன பதில் சொல்லுகிறது ?

மற்றென்றைக் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு தோட்ட முதலாளியாக இருக்கிற வெள்ளைக்காரன், தேயிலைக் கொழுந்தை பறிக்கிற பெண்கள் கைகளிலே வளையல் போட்டுக்கொண்டிருப்பதால் கொழுந்தைக் கிள்ளும்போது வளையல் ஒடிந்து கொழுந்திலே விழுந்து விடுகிறது. அவை இலையோடு சேர்ந்து அரைபட்டுப்