பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இலங்கை எதிரொலி


போய்விடுகிறது. அபாயம், ஆகையால் யாரும் வளையல் போட்டுக்கொள்ளக்கூடாது என்று உத்திரவளித்ததின் காரணமாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டது. பிறகு வேறு கெதியில்லாமல் வெள்ளையன் வழிக்கு வந்து, அதுவும் எப்படி வழிக்கு வந்தார். தோட்ட வேலை செய்து பழக்கமில்லாதவர்களைக் கொண்டு வந்து வீம்புக்கு வேலை வாங்கிப் பார்த்தார். பக்கத்திலுள்ள வெள்ளை முதலாளிகள் இன ஒற்றுமையின் காரணமாக அவர்கள் தோட்டத்திலிருந்த தொழிலாளிகள் சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர்களில் சிலர் வேலைக்கு வர ஒப்புக்கொண்டார்கள், சிலர் தொழிலாளர் ஒற்றுமையை கருதி வர மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக தொல்லைகள் அதிகரித்தது. வேலை செய்து பழக்கமில்லாதவர்களைக் கொண்டு வந்ததின் காரணமாக தோட்டத்தில் என்ன நடந்தது. பார்த்தவர் சிரித்தனர் வெறும் கேலிக் கூத்தாக இருந்தது. அவர்கள், தோட்டத்தில் விட்ட ராஜா வீட்டு கன்றுக்குட்டியைப்போல விளையாடினார்கள். வேலையா செய்தார்கள், வேடிக்கை செய்தார்கள். முதலாளிகள் வேதனையை அதிகப் படுத்தினார்கள்.

அவர்கள் கொழுந்தைக் கிள்ளச் சொன்னால் செடியை வேரோடு பிடுங்குவதும், கொழுந்தைக் கூடையில் போடுவதற்குப் பதில் கீழே போடுவதும், மலைச் சரிவுகளில் பக்குவமாக ஏறத்தெரியாததால் சருக்கி கீழே விழுவதுமான நிலையேற்பட்ட பிறகு வழிக்கு வந்து மீண்டும் பழைய பெண்களை அழைத்து, வளையல் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியதால், ‘வளையல் வெற்றி விழா’ என்ற பெரால் பல பொதுக்கூட்டங்-