பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இலங்கை எதிரொலி


கவலையோடு திரும்பும் என்றுதான் பலர் நினைப்பதுண்டு, அதுதான் இயற்கை என்று பலர் நினைக்கவும்கூடும். ஆனால் வெள்ளையர் நிலை, சுதந்திரம் அடைந்த மக்களை தவிக்க விட்டுவிட்டு, சுதந்திரம் அளித்துவிட்டுச் சென்ற அவர்கள் சுகவாழ்வு வாழ்வது என்றுதான் அவர்கள் அகராதி பேசுகிறது. அந்த வசதியை அவர்கள் எந்த நாட்டிலும் விட்டுக் கொடுத்ததில்லை. ஒரு நாட்டுக்கு அவர்கள் குடியேறி அவர்களை சுதேசிகள் என்று சொல்லிக்கொண்டு அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களை விதேசிகள் என்பார்கள்.

இந்த நிலைதான் அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கையாண்டுக் கொண்டிருக்கும் முறை. இதில் நான் ஆச்சரியப்படவில்லை. சீன நாட்டில் ஒரு வெள்ளையனை ஒரு சீனன் கொன்றுவிட்டான் என்ற காரணத்துக்காக 5 துறைமுகங்களை நஷ்ட ஈடாக வாங்கியிருக்கின்றார்கள். அதுதான் அவர்கள் பிறவிக் குணம். அவர்கள் நினைத்தபோது தாயகம் போகவும் திரும்பவும் எவ்வித அட்டியுமில்லை. அவர்கள் உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் செல்லப் பிள்ளைகள்தான். எப்படி இவர்களை இங்கிருந்து வெளியேற்றுவது என்று பார்த்து யார் யார் தமக்கையின் மகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை விரட்டுவது என்று ஒரு சட்டம், யார் 1939க்கு முன் வந்தார்களோ அவர்களெல்லாம் இவ்வளவு காலம் இங்கே வாழ்ந்ததற்கு அத்தாட்சிக் காட்டவேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டையும் சிந்தித்துப் பார்த்தால் இவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட சட்டங்கள் என்று புலப்படுகிறதே தவிர் கொஞ்சமாவது அறிவு