பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இலங்கை எதிரொலி


வைத்திருக்கும் விஷப் பரீட்சையிலே இருந்து தப்புகிறார்கள். மற்றவரின் நிலை என்ன? மற்றொன்று இவ்வளவு பேருக்கும் ஓட்டுரிமை இல்லாமலாக்கிவிட்ட காரணத்தால் அவர்கள் குறையை சட்டசபையில் எடுத்துச் சொல்ல சரியான பிரதிநிதிகள் போகமுடியாமலே போய்விட்டது. ஒரு நாட்டில் சுமார் 8 இலட்சம் பேர்களுக்கு ஓட்டுரிமை யில்லாமலாக்கிவிட்டு அந்த ஆட்சிதான் ஜனநாயக ஆட்சி என்றால் எந்த பைத்தியக்காரனும் ஒப்புக்கொள்ளமாட்டான்.

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் காலத்தில், பிரதிநிதித்துவம் இல்லையானால் வரி செலுத்த மாட்டோம் (No taxation without representation) என்பதுதான் அந்தக் கிளர்ச்சி. அதே போன்றதுதான் இங்கே இப்போது எழும்பியிருக்கும் பிரச்சினை. எப்போது குடி உரிமையில்லையோ அப்போது பிரதிநிதித்துவம் இல்லை. எப்போது பிரதிநிதித்துவம் இல்லையோ நிச்சயமாக வரி செலுத்துவதில்லை என்ற முடிவுக்கு இங்கே அல்லல்படும் மக்கள் வந்துவிட்டால் அதற்குப் பரிகாரம் தேடுவதுதான் விவேகமே யன்றி, அந்தக் கிளர்ச்சியை அடக்கிவிடலாம் என்று நினைப்பது விவேகமுமல்ல, வீரத்தின் பாற்படாது, அரசியல் மந்தம் என்பதுதான் இதற்குப் பொருள். இந்த நிலையை ஏன் இங்குள்ள பல பிரபல தலைவர்களில் சிலர் கவனிக்காமலும், சிலர் கவனித்தும் முடியாமல் கைவிட்டும், சிலர் கவனிக்க ஆற்றலிருந்தும் போதிய வசதிகளில்லாமலும் இருக்கின்றார்கள் என்று விளங்கிவிட்டது. சரி இது சம்மந்தமாக இந்திய தூதுவர் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டார் என்பதை யறிய 5–5–53 காலை