பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

75


10–30 மணிக்கு இந்தியத் துணைத் தூதுவர் திரு. சாரி அவர்களை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தோம். அவருடைய சந்திப்பு ஒரே நேரத்தில் இருவருக்கு ஏற்படுகிற துக்கச் செய்திகளைச் சொல்லி ஆறுதல் பெற திடம்பிரவேசமாய் விழியில் சந்தித்த நிலையாயிற்று பல விளக்கங்களைத் தந்தார் எனினும் அவற்றை இரு அரசாங்கங்களின் நல்லுறவை எண்ணி, குறிப்பாக இங்கே வதியும் திராவிடத் தோழர்களின் நன்மையைக் கருதியும் வெளியிட முடியாமைக்காக வருந்துகிறோம். அண்மையில் உரிமைப் போராட்டத்திற்காக சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய இலங்கை இந்தியர் காங்கிரஸ் தலைவர் திருவாளர் தொண்டைமான் அவர்களையும் அதன் பொதுக்காரியதரிசி அவர்களையும் 4ந்தேதி மாலை கால்பேஸ் ஓட்டலில் சந்தித்துக் கேட்டோம். அவர் சத்தியாக்கிரகத்தின் தோல்விக்குக் காரணத்தை விளக்கியதோடு, கட்சி தனக்கே இரண்டு லட்சம் கடன் கொடுக்கவேண்டிய நிலையும், மேற் கொண்டும் சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து நடத்தப் போதிய பண வசதி இல்லாததொன்று.

மேலும் லண்டனில் நடைபெறவிருக்கும் எலிசபெத் மகாராணியார் முடிசூட்டு விழாவுக்குச் செல்லவிருக்கும் இரு நாட்டுப் பிரதமர்களும் சந்தித்து, இலங்கை சம்பந்தமாகப் பேசப்போவதால், அதுவரை பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது என்றார்.

சரி. அப்படியானால் குதூகலமான முடிசூட்டு விழாவுக்குச் செல்லுகிற இவர்கள், அங்கே இதைப் பற்றிப் பேசி விரைவில் முடிவுக்கு வரக்கூடிய அவ்-