பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இலங்கை எதிரொலி


வளவு இலேசான பிரச்சினை என்று தாங்கள் கருதுகின்றீர்களா என்று கேட்டேன்.

அப்படித்தான் சொல்லுகிறார்கள். நாம் அதை நம்பாமல் என்ன செய்யமுடியும்? ஆனால், அவர்கள் செய்யும் முடிவு எங்களுடைய கருத்தின் முகவுரையாக இருக்கும் என்றார்.

அப்படியென்றால் அவர்கள் சந்திப்பில் உங்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்கவேண்டுமே என்றேன். பதில் இல்லை. மேலும் ஒரு கேள்வியைப் போட்டோம். இங்கே தோட்டக்காடுகளிலே வதிகின்றவர்கள் வட நாட்டாராக இல்லாததால் நேருவுக்கு இதில் கவலை பிறக்கவில்லை என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம், இதில் உங்கள் கருத்தென்ன என்று கேட்டேன்.

நீங்கள் மாத்திரமல்ல, பல கட்சிகளும், பல தனிப்பட்ட முக்கியஸ்தர்களும் அப்படித்தான் கருதுகிருர்கள் என்றார்.

இலங்கையிலே இருக்கிற காங்கிரசுக்கும் இந்தியாவிலே இருக்கிற காங்கிரசுக்கும் என்ன தொடர்பு என்றோம்.

ஒன்றுமில்லை என்றார்.

அப்படியானல், நேருவைத் தாங்கள் அணுகியது உத்தியோகபூர்வமாகவா அல்லது காங்கிரசின் தலைவராயிருக்கிறார் என்ற காரணத்தாலா என்றேன்.

காங்கிரஸ் தலைவர் என்ற காரணத்தாலும், 1939ல் அவர்தான் இலங்கை இந்தியர் காங்கிரசை தொடங்கிவைத்தவர் என்ற காரணத்தாலும் என்று