பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

77


சொல்லி, பிறகு நேருவை சந்தித்ததில் ஏற்பட்ட முடிவு நீங்களனைவரும் அறிந்ததே என்றார்.

திராவிட நாட்டுப் பிரிவினை சம்பந்தமாக உங்கள் கருத்தென்ன ? என்று கேட்டேன்.

திராவிடத்தில் மாத்திரந்தானா மக்கள் கஷ்டப்படுகிறார்கள், வடநாட்டில் உள்ளவர்களுந்தான் கஷ்டப்படுகிறார்கள், அவர்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் போராடலாமே என்றார்.

அப்படியானால் இலங்கையிலுள்ள இந்தியர்கள் மாத்திரமா குடி உரிமையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களுந்தான் குடி உரிமையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் போராடியிருக்கலாமே என்று கேட்டேன்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு, பிறகு இது ஒரு சிக்கலான கேள்விதான் என்றார்.

இந்தியாவில் வேறு யாரையாவது சந்தித்தீர்களா? என்றேன்.

சென்னையில் பெரியாரைச் சந்தித்தேன். தி. மு. க. பொதுச்செயலாளர் அண்ணா அவர்களைச் சந்திக்க இரண்டு நாட்கள் முயன்றேன். அவர் காஞ்சீபுரம் போய்விட்டதால், சந்திக்கமுடியாமல் வந்துவிட்டேன் என்றார்.

பெரியார் என்ன சொன்னார், என்றேன்.

எங்களைப் பார்த்தவுடனே வீட்டுக்கு வெள்ளையடித்தாய்விட்டது. கூலியை வாங்கிக்கொண்டு வெளியே