பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

79


யும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கமுடியுமா? நாங்கள் கள்ளத்தோணியில் வரவில்லை. ஆகாயத் தோணியில் கட்டணம் செலுத்தி, இரண்டு அரசாங்கங்களின் அனுமதி பெற்று, நான் இங்கே தங்குகிறவரை பணம் 200 ரூபாயை டிபாசிட்டாகக் கட்டி வந்திருக்கிறேன்.

ஆகவே வேட்டிக் கட்டிய அனைவரையுமே கள்ளத்தோணி என்று கேலி செய்யும் முறை ஒழியவேண்டும், அல்லது ஒழிக்கப்படவேண்டும். கள்ளத்தோணியில் வந்தவர் யார்? இங்கே நிரந்தரமாக இருந்தவர்கள் யார்? என்பதை அறிய இதுவரை இலங்கை சம்மந்தமாக பல வரலாற்ருசிரியர்கள் எழுதிய பத்து சரித்திரங்களைப் படித்தேன். அதில் எல்லோரும் இங்கே வந்தவர்கள் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர வேறென்று மில்லை.

ஆனால் முன்னே வந்தவர்கள் பின்னால் வந்தவர்கள் என்று வேண்டுமானல் சொல்லலாம். இப்போது முன்னே வந்தவர்கள்தான் பின்னால் வந்தவர்களை 'வெளியே போ' என்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் முன்னே வந்தவர்கள்தான் முன்னே வெளியேற வேண்டும், பின்னால் வந்தவர்கள் பின்னால் போக வேண்டும். அதுதான் நியாயத்துக்கும் வாதத்துக்கும் சரியானதாகும். ஆனால் முன்னால் வந்தவர்களிடம் ஆட்சி இருக்கிறது. பின்னால் வந்தவர்களிடம் மிரட்சி இருக்கிறது. இந்த ஒன்றைக்கொண்டு அநீதி வழங்குவது மிக மிகக் கொடுமையாகும். அதுவும் இது புத்தர் பேரொளி பரவிய நாடு, புத்தர் துறவரம் பூண்டதைப் போல துறவரம் பூணவேண்டியவர்கள் யார்? என்பதை