பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இலங்கை எதிரொலி


யைப் பார்த்தேன். அது வெளியிட்டிருக்கும் அறிக்கைப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் இருபது முப்பது ரூபாய்கள்கூட மிஞ்சாது. இதைத் தான் தன் நாட்டிலுள்ள பெற்றோர்களுக்கு அனுப்புகிறான். இது எவ்வாறு சுரண்டுதலாகும். தன் உழைப்பை இலங்கையில் இருக்குமதி செய்து 20, 30 ரூபாய்களை ஏற்றுமதி செய்கிறான். அவன் இறக்குமதி செய்த உடல் உழைப்புக்கு ஏற்ற பொருள்தானே அவன் ஏற்றுமதி செய்வது என்பதை சர்க்கார் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்தியர்கள் திறமையும் எங்களுக்கு வேண்டும். அவர்கள் ஒன்றையும் கொண்டு போகக்கூடாதென்றால் அது நியாயமாகுமா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அன்னிய தொழிலாளிகளே இங்கே முதலாளிகள்.

இந்தியத் தொழிலாளிகள்தான் இங்கே உடலுழைக்கும் தொழிலாளிகள். ஆனால் ஸ்விட்ஜர்லாந்து தொழிலாளிகள் இங்கே ஒரு தோட்டத்தை வாங்கி அதில் இந்தியத் தொழிலாளர்களைவிட்டு வேலை வாங்கி லாபத்தைச் சுரண்டிக்கொண்டு ஸ்விட்ஜர்லாந்துக்குக் கொண்டு போகின்றார்கள். தொழிலாளிகள் வளரவும் முதலாளிகள் அவதாரம் எடுக்கவேண்டுமென்பது எந்த மார்க்கசீய சித்தாந்தமோ நமக்குத் தெரியவில்லை. இந்தியத் தொழிலாளிகள் தாங்கள் இந்த நாட்டு பொருளாதார உயர்வுக்காக ஈடுசெய்த உழைப்பின் மதிப்புக்காக இருபது முப்பது தங்கள் தாயகத்திற்கு அனுப்புவது பச்சைச் சுரண்டலாம், ஆனால் அதே நேரத்தில் ஸ்விட்ஜர்லாந்து தொழிலாளர் இயக்கம் இங்கே நகத்தில் மண்படாமல் கொள்ளை கொள்ளையாக சுரண்டு-