பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

83


வது சுரண்டல் அல்லவாம். ஆடம்பரமாக உள்ளே நுழைகிறவனை யார் என்றும் கேட்கமாட்டார்கள் திருமண வீட்டார். சொந்தக்காரனாக இருந்தாலும் பார்வைக்குக் கேவலமாக, ஏழைக் கோலத்தோடு உள்ளே நுழைந்தால் யார் என்று எவனாவது ஒருவன் கேட்டுவிடுவான். அந்த நிலை போன்றிருக்கிறது இன்றைய இலங்கை சர்க்காரின் நிலை. இதுவா நீதி, இதுவா நேர்மை என்பதை எண்ணிப் பார்க்க சர்க்கார் மறுத்தாலும் இங்கே கூடியிருக்கும். நீங்களனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். குறிப்பாக சிங்களத் தோழர்கள் சிந்திக்கவேண்டும். இருக்கும் நிலையை எண்ண மறுப்பவன், உண்மையை நிராகரிப்போன் என்பதைக் காலத்தாலும் மாற்றமுடியாது.

இங்கே வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும். சர்க்கார் பற்சக்கரங்களில் கரகரவெனக் கேட்கும் சப்தம் இந்தியத் தொழிலாளர்கள் இடும் கோரக்குரலின் சப்தம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை, என்றும் இதே நிலையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கமுடியாது. என்றாவது ஓர்நாள் அது ஸ்தம்பித்து நிற்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை இந்த கடற்கரைக் கூட்டத்தின்மூலம் அவர்கள் உணர மறுத்தாலும், சரித்திர சான்றுகளின்மூலம் நல்ல தெளிவு பெறக்கூடும் என்பதிலே நமக்குக் கொஞ்சமும் ஐயமில்லை.

ஏதோ ஒரு அளவுக்கு வாழ வழியிருக்கிறது என்பதற்காக பல பக்கங்களிலிருந்து வரும் தாக்குதலை மௌனமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படி ஏற்றுக்கொள்வது மனித குணமுமல்ல என்பதை பிரதமர் எண்ணிப் பார்க்கவேண்டும். ருசியான பண்டம் என்-