பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இலங்கை எதிரொலி


பதற்காக, சாக்கடையின் பக்கத்தில் வைத்து எவனும் உண்ணமாட்டான்.

அப்படித்தான் என்ன நாகரீகமான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றார்கள் இங்கே இருக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ?

அழடேம் பீடாரட்மலி, பதுளை பண்டாரவளைக்கு அருகாமையிலிருக்கும் பல தோட்டங்களையும், அங்கே தொழிலாளிகளையும், அவர்கள் குடி இருக்கும் இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். அழுக்குப் படிந்த உடைகளோடு காட்சியளித்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு நல்லுடையில்லாமல் கிழிந்த ஆடைகளோடு பரட்டைத் தலையுடன் கூட்டம் கூட்டமாக வந்து நின்றார்கள். வீடு இருபது அடி நீளமும் பத்து அடி அகலமும் இருந்தது. ஜன்னல்கள் அமைக்கப்படாமல் ஒரே இருட்டாயிருந்தது. அந்த ஒரு அறையில் தகப்பனும் தாயும், திருமணமான மகனும் மருமகளும், இந்த இரண்டு ஜோடிகளுக்கும் பிறந்த நான்கைந்து குழந்தைகளும், அந்த அறையிலேயே ஒரு மூலையில் அடுப்பு, அதன் பக்கத்தில் விற்கு விராட்டி, ஒரு பக்கத்தில் ஈளை இருமலோடு துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் கிழவன் கிழவி, மற்றோர் மூலையில் குளிரோடு போராடிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி, மற்றோர் பக்கம் கூடையில் மூடி வைக்கப்பட்டிருக்கும் கோழியும் அதன் குஞ்சுகளும் இவ்வளவுக்கும் மேலாக வீடு முழுதிலும் சிங்களப் பூச்சிகள் என்ற ஒருவிதப் பூச்சிகள். இந்த இருட் குகையில் வாழ்கின்ற அவர்கள் 1939ல் இருந்து எந்த ஆதாரத்தைக் காட்ட முடியும். வேண்டுமானால் அவன் பாட்டன் வைத்துவீட்டுப் போன பொத்தல் கோட்டு-