பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

85


களையும் கதிர்காம முருகன் படம் ஒன்றையும் காட்ட முடியும். இந்த இரண்டு ஆதாரங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருள்களா? கதிர்காம முருகர் எப்போ பிறந்தார் என்பதற்கு எந்த ஜனன மரணகணக்கில் குறிப்பு இருக்கின்றது? இப்படி அழுதுக் கொண்டிருக்கின்றார்கள் மலைநாடுகளில் தொழிலாளிகள்.

எங்கேயோ சில தோட்டங்களில் நல்ல முறைகளில் வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் நன்றி. அதேபோல் எல்லா தோட்டத் தொழிலாளரின் வீடுகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்பதுதான் எங்கள் விருப்பமும் வேண்டுகோளும்.

காடும் வனமும் வனாந்திரமுமாக இருந்த அந்தப் பகுதிகளை செப்பனிட்டு பொன் கொழிக்கும் நாடாகச் செய்வதற்கென்றே தென்னாட்டிலிருந்து பலரை கூலிகளாகப் பிடித்துக் கங்காணிகள் இங்கே கொண்டுவந்த முதல் ஆண்டு 1853. சரியாக நூறாண்டுகளுக்குப் பிறகே நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் வருகையில் மிக மிகத் தாமதமேற்பட்டுவிட்டது என்பது உண்மை தான். எனினும் இலங்கையின் எல்லா பகுதிகளிலும் உரிமை முரசம் கேட்கப்படும் இந்த நேரத்தில் நாங்கள் வந்ததால் அரசியல் நிலையை சரிவரத் தெரிந்துக்கொள்வதற்கு சரியான நேரமாக அமைந்திருக்கிறது என்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தான் ' வெளியேறுங்கள்' என்கிறார்கள். “நீங்கள் வந்த வேலை தீர்ந்துவிட்டது இனி நீங்கள் போகலாம்” என்று மறைமுகமாகச் சொல்வதுதான் இதன் அர்த்தம்.