பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இலங்கை எதிரொலி


மனிதன் மனித குணத்தோடு இருக்கும்வரை யாருக்கும் திங்கிழைக்க எண்ணமாட்டான். ஆனால் அவன் மிருகமாக மாறும்போது பிறருக்கே தீங்கிழைக்க எண்ணுவான். அதுவும் தன்னால் வளர்க்கப்பட்ட தேயிலைத் தோட்டம், தன்னால் வளர்க்கப்பட்ட ரப்பர் மரங்கள் தன்னைக் கேலிசெய்யும் முறையில், ‘போ வெளியே’ என்று சொல்லுமானால் அதன் அழகை அப்படியே விட்டுவைத்துவிட்டு வெளியேற மாட்டான். அழித்துவிட்டே வெளியேறுவான். இந்த நிலையை ஒரு நாகரிக நாடு உண்டாக்காது. கூடாது.

இதில் சிங்களத் தோழர்கள் மிக நல்லவர்களாக இருப்பதால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கின்றனர். அவர்களுடைய பொறுமையையும் நியாய சிந்தையையும் பாராட்டுகிறோம். அந்த நல்ல சிங்களத் தோழர்களை மனதில் நினைத்துக்கொண்டுதான் வகுப்புக் கலவரம் ஏற்பட ஏதுவாகும் என்று பூச்சாண்டி காட்டுகிறது சர்க்கார். இப்போது எழும்பியிருக்கும் பிரச்சினை சிங்களத் தோழர்களுக்கும் திராவிடத் தோழர்களுக்கும் ஏற்பட்டிருப்பதல்ல, அல்லது சிங்களத் தோழர்கள் அனுபவித்துவரும் அதிகப்படியான உரிமைகள் எங்களுக்கு வாங்கிக் கொடுங்கள் என்ற பொறாமையால் ஏற்பட்ட பூசலுமல்ல, இருசாராரையும் மோதவிடுவதன் மூலம் முடிவு காலக்கடலில் மெதுவாக மிதந்து செல்லலாம் என்று நினைக்கிறது சர்க்கார். அரசியல் உரிமை கேட்பது எப்படி வகுப்புக் கலவரமாகும்? அந்த வகுப்பு கலவரத்தை எந்தநாளும் உண்டாக்க முடியாது. அந்த நோக்கத்துக்காக ஏற்பட்டதல்ல திராவிட முன்னேற்றக் கழகம். தென்னாட்டில் ஆரியர் திராவிடர் பிரச்சினை