பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

91


என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் அதிக தொல்லைப்பட வேண்டியதில்லை.

கம்யூனிஸ்டு கட்சி வைத்துக்கொண்டிருக்கின்ற பொருளாதாரத் திட்டம், சமசமாஜக் கட்சி வைத்துக் கொண்டிருக்கின்ற சமதருமத் திட்டம், தமிழரசுக் கட்சி வைத்துக்கொண்டிருக்கின்ற நாட்டுப் பிரிவினைத் திட்டம், இவ்வளவுக்கும் மேலாக இந்தக் கட்சிகள் அனைத்துமே இதுவரையில் வெளியே சொல்லப் பயப்பட்டுக்கொண்டிருக்கின்ற சமூக சீர்திருத்தத் திட்டம் ஆகிய கொள்கைகள் அனைத்துமே தன்னகத்தில் கொண் டிருக்கின்ற காரணத்தினால்தான் பல்வேறு இடங்களில் பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது தி. மு. க. இதை வேண்டாமென்று ஒதுக்கித்தள்ள வேறு எந்தக் கட்சியாலும் முடியாத அளவுக்கு மக்களுடைய அளவுகடந்த அபிமானத்தைப் பெற்றிருக்கிறது. இங்கே பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியபின் பிரதமர் டட்லி சேனா நாயகா அவர்களை சந்திப்பதற்காக பேட்டி கேட்டிருந்தோம்.முதலில் எது சம்மந்தமாக காண விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதைக் குறித்தனுப்புங்கள் என்று எழுதியிருந்தார். பல கேள்விகளை எழுதி, இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்வதற்காகவே தங்களைக்காண விரும்புகிறோம் என்றோம். அந்த மனு அவருக்கு சேர்ந்த பிறகு நான் இலண்டன் போவதற்கு முன்பாக பலரைச் சந்திக்க நேரத்தைக் குறித்துவிட்டேன், ஆகவே இயலாமைக்காக வருந்துகிறேன், என்று சொல்லிவிட்டார். முதலில் காரணத்தைக் கேட்டார். பிறகு எங்கள் காரணங்களை-