14' "அப்படியா?....பேஷ்!” "அழகான பச்சைக் கல்லும், அழகுச் சாதனங் களும், பிரெஞ்சு வாசனைத் திரவியங்களும் உனக்குத் தருவேன்.” ’அத்துடன் உதட்டுச் சாயமும் வேண்டும்!” பகற்கனவில் திளைத்தாள் அவள்; கண்கள் மூடிக் கொண்டன. ஆழ்ந்த பெருமூச்செறிந்தாள். 'உங்களை யாருமே தடுக்க முடியாது...பயணம் எத்தனை நாளைக்குத் தொடரும்? வேறு என்ன விசே ஷங்கள்-அதிர்ஷ்டங்கள் உள்ளன? ஆச்சரியம் பொங்கக் கேட்டாள்; அவன்பேரில் நேசம் நிரம்பிய கடைக்கண் பார்வையை வீசினுள். 'குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு தினங் களாகலாம். வெள்ளைக்காரர் ஜேம்ஸ் தாயெர் கொரியாவில் இருந்தவர். தான் துப்பாக்கிப் பிர யோகத்தில் கைதேர்ந்தவரென்று உறுதி சொல்கிரு.ர். எனக்கு துப்பாக்கியைக் கையாளத் தெரியாது; இம் மாதிரியான ஒரு தோழருக்காகவே நான் இதுவரை காத்திருந்தேன்." 'நீண்ட காலமாக உங்களுக்கு இந்தமாதிரியான எண்ணம் உண்டோ?” "ஆம், பல வருஷமாக உண்டு.” 'வருஷக்கணக்கிலா?” "ஆமாம்.” "அதைப்பற்றிப் பிரஸ்தாபித்ததுகூட இல்லையே ....தாங்கள்?” - - "என்னை இத்தகையதொரு முடிவுக்கு வரச் செய்த விவரத்தை உனக்குச் சொல்லவேண்டும், சில
பக்கம்:இலட்சிய பூமி.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
