பக்கம்:இலட்சிய பூமி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224


ளுடைய ஆழப்பதிந்த கண்களை அவன் அடையாளம் புரிந்துகொண்டான். படகோட்டி கரையிலிருந்து படகைத் தள்ளிப் புறப்படச் செய்தான். கழியை துடுப்பாகப் பயன்படுத்தி படகை அவன் செலுத்திகொண்டிருந் ததை ஜேம்ஸ் தன் இருப்பிடத்திலிருந்தே பார்த் தான். பாலத்தின் கீழே, இரண்டு ஆறுகளின் சங்க மத்தால் நீரோட்டம் வேகமாக இருந்ததால் படகு சற்றுத் திணறியது. பின்னர் திரும்பி சிறிய வாய்க் காலில் வலது பக்கம் சென்றது. டுவான் இப்போது நல்ல மூச்சு விட்டான்; கரையிலிருந்த தெருக்கள்மீது அவன் கண்கள் நிலைத் திருந்தன. - - - பொழுது சாயவில்லை. அரைமைல் துரம் சென்றவுடன், வீடுகள் மறையலாயின: படகு மலையடிவாரத்தை அடையும் வரையில், பிற்பகல் வெயிலில் பொன்னக மிளிர்ந்த விவசாயப் பண்ணை களும், தோப்புக்களும் நிரம்பிய நாட்டுப்புறத் தோற்றம் சரிவாகத் தெரிந்தது. . . . நகரத்தைச் சுற்றியுள்ள துறைகளில் படகுகள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஆனல் அவர்கள் நகரத்தை நெருங்கியபோது அங்கொன்றும் இங் கொன்றுமாகப் பிரிந்து கிடந்த இரண்டு அல்லது மூன்று படகுகளின் தொகுதிகளே காணப்பட்டன. தாழ்வான பாய் விரிப்பின் காரணமாக உடல் தசை களில் இழுப்புவலி உண்டாகிவிட்டது போன்று ஜேம்ஸ் உணரலானன். சஞ்சலத்துடன் இடத்தை மாற்றிக்கொண்டான். கடைசியாக, ஆசனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/224&oldid=1274950" இலிருந்து மீள்விக்கப்பட்டது