32
சைனவிலிருந்து எட்டு வருட இடைக்காலத் துக்குப் பின்னே அங்கு வந்திருந்தான். முதல் காலைப் பொழுதிலேயே அவன் மகிழ்ச்சியோடு இருந்தான். தன்னுடைய உடன் பிறந்தார் மகனை அவள் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் பேரில் அவ ளுக்குப் பிரியம் அதிகம். அவனது வெய்ச்சோ விஜயம் குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டும், பயணத்திற்கான காரணத்தை யூகித்துக்கொண்டும் இருந்தாள். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவளுடைய பாட்டியினுடைய தலைமுடியைப் போலவே அவள் தலையும் பொன் நிறமாக இருந்தது. கறுப்பு கொண்டைவலை போட்டு அதை மூடியிருந் தாள். லேசாக வெளிறிய முகம்; நீலக் கண்கள்; கன்னப் பொட்டுக்களில் வெளிரிய சிவப்பு நரம்புகள் ஒடியிருந்தன, அவ்வளவு மென்மையாக இருந்தது மேனியழகு. குழந்தையிலிருந்தே ஜேம்ஸை அவ ளுக்குத் தெரியும். அவன் சங்கோசப்பிராணி, தன்னம்பிக்கை இல் லா தவ ன க படிப்பதிலேயே நாட்டமுடையவனக இருந்தான்; எதையும் விடாமல் படிப்பான்! அவளும் சங்கோஜப்பிராணிதான். தன்னுடைய உடன் பிறந்தார் மகன் பேரில் அவள் இயல்பாகவே பாசம் கொண்டிருந்தாள். அவன் இப்போது கலைக்கு தன்னை அர்ப்பணித்துகொண்ட மாளுக்களுகிவிட்டான்!
ஜேம்ஸ் த்ர்யெர், ஃப்ளாரென்ஸில் கலைக்கல்வி பயின்ருன் கிழக்கத்திய நாடுகளுக்கு வருவதற்கு முன்னல், ஏதென்ஸ்-க்கும் ஆப்கானிஸ்தானத் துக்கும் உல்லாசப் பயண்ம் செய்தான். பீகிங்கில்