பக்கம்:இலட்சிய பூமி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463


அவர்களுக்குக் கீழே வல்லூறுகள் காற்றிடை வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. அடிச் சுவட்டுப் பாதை யில் இரண்டு குன்றுகள் அடைந்திருந்த இடத்தில்: மரமடர்ந்த காடும் தாவர வகைகளும் இருந்தன. மரங்கள் யாவும் ஏதோ ஒரு இடத்தை விரும்பியது போல் குறிப்பிட்ட உயரத்தில் வளர்ந்திருந்தன. கோலநட்டின் உச்சியில் பழுப்பு நிறம் கொண்ட புல்லைத் தவிர்த்து, மரங்கள் ஏதுமில்லை. காற்று மேலே ஊளையிட்டுச் சுழன்றது; ஆனல், இங்கே இலைத் தொகுதிகளைத் தாக்கியபோது, அடிக்கடி சல. சலப்பு எழுந்தது. சுற்றிலும் அடர்ந்த புதரில் சிள் வண்டுகளின் ரீங்கார ஒலிகள் பலமாகக் கேட்டது. சிவப்பு எறும்புகள் தரையில் ஊர்ந்தன. ஹவாங் அகன்ற கன்னங்களுடன் கக்கூடிய - நடுத்தர உயரமுள்ள மனிதன். அவன் தலை அகாலத் தில் வழுக்கை விழுந்துவிட்டது; ஆனல் நன்கு தலை நிமிர்ந்து நடந்தான். கண்களுக்கடியில் தோல் பிடிப்புக்கள் உருவாகிக்கொண்டிருந்தன; தாறு மாருக இருந்த தன் பல்வரிசை வெளியே தெரியும் படி அவன் பேசியபோது. அவன் மனப்பூர்வமாக, புன்னகை செய்வது போலவே இருந்தது. தன்னம் பிக்கையுள்ள உறுதியான மனிதன் அவன். ஃபானுடன் அமைதியாகக் காத்திருந்தான் ஜேம்ஸ். முந்தின இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி டிங்கையும் மாவோவையும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஹவாங். . தாங்கள் கைப்பற்றிய இரண்டு துப்பாக்கி களையும் பரிசோதித்தபடி, "மிக நல்ல துப்பாக்கி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/463&oldid=1275103" இலிருந்து மீள்விக்கப்பட்டது