பக்கம்:இலட்சிய பூமி.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486


தில் அடைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவில் சில ஷகுன்டாக் பெண்களும் இருந்தார்கள். ஈஸ்விடம் ஜேம்ஸ் திரும்பிச் சென்ருன். அவள் தலைமுடி காற்றினல் அலேக்கழிக்கப்பட்டிருந்தது. குழுவினர் தங்களைச் சிறிதளவு சுத்தப்படுத்திக் கொண்டு சற்றே செளகரியமாக இருப்பதுபோல் தோன்றினர்கள். தாத்தா பார்த்துக்கொண்டிருக்க வறுத்த அரிசியை ஒரு தேக்கரண்டியால் பங்கிட்டுக் கொண்டிருந்தாள் ஈஸ் டுவான் முந்திய நாள் சகதியில் விழுந்தபோது அவனுடைய உணவு அவிழ்ந்து சிதறிவிட்டது. ஸ்வாட்டும் அவள் கண வன் சாங்ஃபூவும் உணவு எதுவும் கொண்டுவரவில்லை. அவர்கள் பேசாமல் அருகே உட்கார்ந்துகொண்டிருந் தார்கள். ஆனல் அங்கு இருந்த அரிசி எல்லோருக் கும் காணும்படியாக இருந்தது; இதுதான் அவர் களது கடைசிச் சாப்பாடாக இருக்க வேண்டும், அவர்கள் எல்லையைத் தாண்டிவிட்டால் பின்னர் அவர்களுக்கு இந்த உணவுப்பங்கீடுகள் தேவைப்பட மாட்டா. “உங்கள் தலைப்பாகை எங்கே?' என்று சாங்ஃ பூவை விசாரித்தான் ஜேம்ஸ். 'எல்லாம் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது!” "கீழே உள்ள கிராமத்தை நான் பார்வையிட் டேன்' என்ருன் ஈஸ்விடம் அவன். "கீழே அமர்ந்து கொஞ்சம் சாப்பிடுங்கள்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/486&oldid=1275121" இலிருந்து மீள்விக்கப்பட்டது