பக்கம்:இலட்சிய பூமி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i அத்தனை ஆசை வெறி கொண்ட செயலல்ல! அத் தகைய வழித்துணைகளில் யாரையாவது உங்களுக்குத் தெரியும்பட்சத்தில் என்னிடம் சொல்லுங்கள். அம் மாதிரி, நம்பிக்கைக்குப் பாத்திரமான வழிகாட்டி ஒருவனை ஹாங்-காங்கில் என்னிடம் சிபார்சு செய் தார்கள்;” பேசிக்கொண்டே சட்டைப் பையிலிருந்த குறிப்புப் புத்தகத்தைப் புரட்டினன். அந்த வழி காட்டியின் பெயர் ரகசியமான சங்கேத பாஷையில் ஆங்கிலத்தில் மாடல் ராக்ஃபீல்ட் என்றும் சீன மொழியில் ஃபான் ஷெக்டின் என்றும் குறிக்கப் பட்டிருந்தது. 'அத்தை, ஃபான் ஷெக்டின்' என்கிற ஒரு ஆளைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான் ஜேம்ஸ். ஜேம்ஸின் கான்டன் மொழி உச்சரிப்பை சட் டென்று அவளால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. வெய்ச்சோவின் பிரதேச மொழி வேறுபாடு சற்றே மாறுபட்டிருந்தது. "ஃபான் ஷெக்டின்.ஆமாம். தெரியும்!...இந்நகரத்தில் ஃபான்ஸ் என்னும் பிரி வினர் கம்யூனிஸ்டுகள் வருவதற்கு முன்னே அதிகப் பணம் படைத்த குடும்பத்தினராக இருந்தார்கள். உன்னிடம் அவன் விலாசம் இருக்கிறதல்லவா? 'ஆம்.” "ஈஸ்தெரின் தந்தையான மிஸ்டர் டுவானுக்கு அந்த நபரைத் தெரியும். இது நிச்சயம்.” "இனி காலங்கடத்த நேரம் இல்லை. அந்த ஆளை இன்றே நான் சந்திக்க வேண்டும்; என் வருகையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/61&oldid=753139" இலிருந்து மீள்விக்கப்பட்டது