பக்கம்:இளந்தமிழா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புவழி

மக்களெலாம் தேவர்களாய்

மாறவொரு வழியுண்டு

மனம் படைத்த பெரும்பயனும்

மனிதனுக்கு வாய்த்திடுமாம்;

தக்கபடி மனம் மலரத்

தந்திரமும் நாமறிந்தால்

தாரணியை விண்ணடாய்ச்

கமைத்திடீலாம் ஐயமில்லை

மனம் என்னும் பெருங்கரங்கு

மாயத்தின் பெருஞ்சுழ்ச்சி

வாழ்வெல்லாம் தந்திடவும்

தாழ்வெல்லாம் சூழ்த்திடவும்

கணத்தினிலே சொர்க்கமதும்

கணத்தினிலே பாழ்நரகும்

காட்டவல்ல மனக்குரங்கு

கடவுளின் பெருங்கொடையாம்

மாயமனக் குகையினிலே

மச்சுண்டு;மேல்மாடி

வாழ்ந்திருப்போர் தேவர்களை

மற்றந்தக் கீழ் நிலையில்

தாயநியா விலங்கினங்கள்

தலையில்லாப் பெரும்பேய்கள்

தாழ்வளிக்கும் உணர்ச்சியெலாம்

தங்கியுறை பெருநகரம்{{rh||99|}
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/101&oldid=1394494" இலிருந்து மீள்விக்கப்பட்டது