பக்கம்:இளந்தமிழா.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலி கடிதம் ஒர் இள நங்கை அழகுக்கு அழகு செய்யும் அழகி மதனனே மயங்கிவிழும் வனப்புடையாள் சிற்றோடை யொன்றில் சேலை துவைத்திருந்தாள் : கட்டழகன் காளை காவலனும் கண்ணுற்றான்; காதலித்தான் மங்கையே உன்னை மணக்க மிக விழைகின்றேன்: சங்கையுற வேண்டா தரணிக்கு நாயகன் நான். மேற்கொண்டு நான் செல்லும் வினைமுடித்துக் கூப்பிடுவேன், வரவேணும் என்றிரந்தான் : பாவை உடன் பட்டாள்சென்றுவிட்டான் இளவேந்தன் காத்திருந்தாள் பெண்ணமுது காதலினால்: மங்கைப் பருவம்போய் முதிர் கிழமாய் மாறினளே! மேனி சுருங்கிற்று; முகமதியம் கலைமாறிச் சாகும் பருவத்தைச் சார்ந்துவிட்டாள் கற்பரசி. 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/106&oldid=1361128" இலிருந்து மீள்விக்கப்பட்டது