பக்கம்:இளந்தமிழா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல புதுக் கவிதைகள் அடங்கிய இந்த திருந்திய ஆரும் பதிப்பிற்கு

டாக்டர் ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன்
    அவர்கள் வழங்கிய
        முகவுரை

கவிஞர் பெரியசாமித் தூரன் அவர்கள் ஓர் விந்தை மனிதர். பல ஆண்டுகளாக அல்லலுறுத்தும் பல உடல் நோய்களோடு வீரப் போராட்டம் செய்து வருகிருர்கள். அவ்வாறு போராடுவதற்கான உடல் தெம்பும் மனத் தெம் பும் அவர்களுக்குக் கொடுப்பது அவர்களுடைய கவிதை. மனித மனம் இரு வேறு மண்டலங்களில் சஞ்சாரம் செய்கிறது, தவளை நீர் மண்டலத்திலும் நில மண்டலத் திலும் சஞ்சாரம் செய்வது போல. காலம்-இடம் என்ற சிறையில் அகப்பட்டிருக்கும் உடலோடு சேர்ந்திருக்கும் போது மனித உள்ளமும் கட்டுப்பட்டு வருந்துகிறது. ஆனால், காலம்-இடம் அற்ற ஆன்மாவோடு சேர்ந்திருக் கும்போது, மனித உள்ளம் சிறையை விட்டு விடுதலையான பூரண சுதந்திரத்தோடு உலாவுகிறது. உடலோ உப்புக்கும் கூழுக்கும் அடிமைப்பட்டிருக்கிறது. ஆனால் உயிரோ விஸ்வ வெளிக்கே நம்மை இழுத்துச் சென் று விடுகிறது. துரனுடைய உடல் தொல்லையோடு துாரனுடைய கவிதை ஒய்யாரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை நன்ருகத் தெளிவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/11&oldid=1358728" இலிருந்து மீள்விக்கப்பட்டது