பக்கம்:இளந்தமிழா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெலால் சென்

முந்திவந்த பகைவரை வேலால்–பெலால்
மோதியுயி ருண்டுவரு வானுல்.

செத்தவர்கள் கணக்கில்லே யன்று-வளர்
தீரனவன் களங்கொண்டான் வென்று.
கத்துகுயில் மொழியாளைக் காண-அவன்
கடுகிவந்தான் காற்றுவேகம் நாண.

சூரியனும் மேற்றிசையில் வந்து-எங்கும்
சூழுமிருள் கண்டனன் சிவந்து:
ஆரியனும் மல்லகதி பறந்தான்-களிப்பில்
அங்கையிற் புருவின்பிடி மறந்தான்.

விண்ணிலது படபடத்து நேரே-ஒரே
வேகமதாய்ச் சென்றதவன் ஊரே.
வண்ணப்பரி தட்டிவிட்டான் உள்ளம்-சால
வதவதக்கத் தாண்டும்மேடும் பள்ளம்.

கோட்டைதனில் நுழைகின்ற போதே-அங்குக்
கொழுந்துவிட்ட தீகண்டான் தீதே;
மீட்டுவந்த வெண்புறவு கண்டு-அந்தோ
வீழ்ந்துவிட்டான் நாதனெனக் கொண்டு

தீக்குளித்தாள் கற்பரசி நொந்தே-அந்தத்
தீரனும் துடித்தான் உளம் வெந்தே.
தேக்கறியும் எரியினிடைச் சென்ருன்-"என்றன்
தேனேவந்தேன் உன்னுடன்நான்" என்றான்.

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/110&oldid=1535568" இலிருந்து மீள்விக்கப்பட்டது