பக்கம்:இளந்தமிழா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வீரன் குமரன் அன்னையின் இன்மொழி கேட்டணன்-அவள் அடிமலர் கண்களில் ஒற்றினன்; "சொன்ன அறிவுரை போற்றுவேன்-உங்கள் சூரத் தமிழ்மர போங்கவே."

வாங்கினன் கையிற் கொடியினை-மூன்று வண்ணம் ஒளிர்ந்தது வானிலே, பாங்கினில் அன்னையும் நெற்றியில்-வெற்றி பாடித் திலகம் அணிந்தனள்.

"ஜய ஜய பாரதம்' என்றுமே-கூவித் தலைநிமிர்ந்தேகினன் காளையும்: 'ஜயஜய' என்றுபல் லாயிரம்-மாந்தர் சாற்றிப் பின்சென்றனர் வீதியில்.

பேரொலி அண்டம் பிளந்தது-அடிமைப் பிடியும் மனத்தில் தளர்ந்தது; வீரன் குமரனேர் ஏறுபோல்-தடை மீறியே வீதியில வந்தனன்.

அந்நியர் ஆட்சியின் சூழ்ச்சியால்-மிக அஞ்சி நடுங்கிடும் சேவகன் முன்னணி தன்னிற் கொடியுடன்-வரும் மொய்ம்புடை வீரன் குமரனை

மண்டையி லோங்கி யடித்தனன்-அந்த மண்டையில் மூளையில் லாதவன்; கண்டவர் உள்ளம் கொதித்தது-காளே காந்திக்கு ஜே' யென்று கவிஞன்.

           113
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/115&oldid=1360623" இலிருந்து மீள்விக்கப்பட்டது