பக்கம்:இளந்தமிழா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 சுண்டுவாதத்தால் அல்லலுறுகிறது தூரனுடைய உடம்பு.ஆளுல்,வெறும் உடம்பா தூரன்?இல்லை.வேதனை தருகின்ற வாதத்தைத் துணிச்சலோடு புறக்கணித்து விட்டு,கவிதைசெய்யும் ஆனந்த ரஸவாதத்தில் ஈடுபட்டுத் துள்ளிவிளையாடுகிறது துாரனுடைய உள்ளம். இதோ ஒரு பாடல்:-

    ஆடியெழும் நாகமதை
       அடிமிதிக்கும் பருவம் 
    அளவில்லா உயர் எண்ணம்
       அனல்வீசும் பருவம் 
    தேடறிய கலையெல்லாம் 
       நாடுகின்ற பருவம் 
    தீஞ்சுவைசேர் கவிக்கனலில்
       சிறந்திருக்கும் பருவம்

இடையூறு என்ற சொல்லே கவி தூரனுடைய கற்பனை அகராதியில் கிடையாது.மேலும் சொல்லுகிறார் :-

    எண்ணிலா இடையூற்றை 
       எதிர்த்தேகும் பருவம் 
    எட்டாத கொம்பெனினும்
       ஏற எழும் பருவம்

    வெற்றியெலாம் பற்றிக்கை
       வீசுகின்ற பருவம் 
    விண்ணாடாய் உலகாக்க
       விரும்புகின்ற பருவம்

கிழவர்களுக்கே இளமையூட்டும் வீறுகொண்ட பாடல்கள் இவை.

 இனி, காதலைப்பற்றிச் சில பாடல்கள். கருக்கரிவாள் கையிலேந்தி,கழனிசெல்லுகிருள் ஒரு மங்கை.அவளுடைய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/12&oldid=1359042" இலிருந்து மீள்விக்கப்பட்டது