பக்கம்:இளந்தமிழா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவியும் ராணாவும்

"பெண்க ளுக்கணி யானதோர் அன்னையே
பேசும் சூளுரை கேட்டுயிர் நீங்குவாய் -
மண் ணிதையினி மீட்குமுன் கையினில்
வாங்கும் வாளினை விட்டுப் பிரிந்திடேன்.

"உன்றன் ஆவிநற் சாந்தியை எய்துக;
உயிரின் நல்லவர் நாதனும் மைந்தரும்
சென்ற வீரத் தலத்திடைச் சேருவாய்;
திரும்பி னேன்சித் தூரையே மீட்கநான்."

புயல் மடிந்தது மன்னன் உளந்தனில்
புத்து ணர்ச்சியும் பொங்கிச் சுரந்தது;
"ஜய மடைந்திடு வேன் தனி நின்றுநான்
தளர்வு தீர்ந்தனன்" என்று முழங்கினான்.



130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/122&oldid=1361678" இலிருந்து மீள்விக்கப்பட்டது