பக்கம்:இளந்தமிழா.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன்

தமிழினத்தின் சிகரத்திற்குக் கம்பனென்று பேர்
கன்னித்தமிழ் இன்பத்தித்திற்குக் கம்பனென்றுபேர்
ஓரண்டமிசை அமுதத்திற்குக் கம்பனென்று பேர்
பூமகளாம் சீதைகற்பும் கம்பன்புகழும் நேர்

ஆண்மைஅறம் அன்பின் பெருமை அளக்கும் காவியம்
அண்மைக் குறளின் கருத்தையெல்லாம் விளக்குங்காவியம்
மாண்புமிக்க தமிழன் பண்பைத் தீட்டும் காவியம்
வளருந்தமிழின் அழகுக்கழகு கூட்டும் காவியம்

சுடரும் பரிதி ஒளியைப்போல் ஒளியும் வேறுண்டோ?
மதுரவானின் நீலம்போல நீலம் வேறுண்டோ?
ஓடும்நீா் போல விாிந்தநீாின் பரப்பு வேறுண்டோ?
கம்பநாடன் கவிதைபோலக் கவிதை வேறுண்டோ?



134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/136&oldid=1359890" இலிருந்து மீள்விக்கப்பட்டது