பக்கம்:இளந்தமிழா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தூரனின் பரிவும், இரக்கமும் நம் உள்ளத்தைத் தொட்டுக் கனியவைக்கின்றன.

 வறுமை மண்டிக்கிடக்கும் பாழுங் குடிசை;அதில் வாழும் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடுகிருர்கள். குடிசை எப்படி இருக்கிறது?
   உப்புப் பொரிந்து உதிரும்
      உவர்மண், இடிந்தசுவர்!
   தப்பி கிமிர்ந்தெழுந்தால்
     தலையிடிக்கும் தாழ்கூரை.

பக்கத்தில் விளையாடுகிருன் ஒரு பாலகன். அதனை வருணிக்கிருர் கவிஞர்:

  கந்தலொரு கோவணமே
    கண்டவுடல்; மற்றும் அனல் 
  சிந்தும் வெயில், கடுங்குளிரே
    சிறுவனுக்கு மேற்போர்வை.

அவன் கூவியழைக்க ஒரு சிறுமி ஒடி வருகிருள். அவள் வந்த வரிசை எப்படி இருக்கிறது?

   கந்தல் அவன் ஆடை
      கன்னிக்கு அதுவுமில்லை
   இந்த உலகில் வந்த
      இயல் வடிவாய்க் -
                காட்சிதந்தாள்.

இருவரும் கூடி விளையாடுகிருர்கள். எளிய விளையாட்டு அது. மரக்குதிரையோ பொம்மைக் காரோ அவர்களுக் கேது?

   அன்புடனே கூடி அவர்
       அரிதாக மண் சேர்த்துச்
   சின்னச் சுவர் எழுப்பிச்
       சிற்றில்ல மாக்கியதில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/14&oldid=1358779" இலிருந்து மீள்விக்கப்பட்டது