பக்கம்:இளந்தமிழா.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 13 பனங்கொட்டை யொரு நான்கு

  பாதையிலே கண்டெடுத்த

கனங்கெட்ட லாடமொன்று

  கண்ணுடித் துண்டிரண்டு

ஓடையிலே போயெடுத்த

  உருண்டைக்கல் இருமூன்று

செல்வந்தன் வீட்டுக் குழந்தைக்குக் கற்பனைச் செல்வமும் இருக்கும்.

 சிந்தை கவர் ஒவியங்கள், செயல்மிக்க சிற்பங்கள், கந்தங்கமழுகின்ற காமன்மகிழ் பள்ளியறை, நல்ல நல்ல உண்டிவகை, காலுக்குச்சோடு, காசிநகர்ப் பட்டுடைகள். ஆனல் வறுமையின் குழந்தைகள் இவர்கள். கற்பனையும் அவர்களுக்கு வறண்டு போயிருக்கிறது. ஆகவே சிறுமி என்ன செய்கிருள்:

சிறுமியவள் அந்தச்

  சிறுவிட்டின் உள்ளிருந்து

உரைத்தாள் ஒருசொல்தான்,

  'ஓடிவா, கஞ்சிகுடி,

மண்வெட்டப் போகணுமாம்

   பண்ணையார் ஏசுகிருர்’

இந்தக் காட்சியை நாடகப் பாங்கில் தீட்டிவிட்டு, கவிஞர் நம்மைப் பார்த்துக் கேட்கிருர்:

 துன்பத்திலே தோன்றித்
   தொழும்பே வடிவாளுேர்க்(கு)
 இன்ப விளையாட்டும்
   இல்லையோ இவ்வுலகில்?

வாய்ப்பான பாடல் இது, படிப்போர் இதயத்தை இளக்கும் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/15&oldid=1358788" இலிருந்து மீள்விக்கப்பட்டது