பக்கம்:இளந்தமிழா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குழந்தை விளையாட்டு

உப்புப் பொரிந் துதிரும்

 உவர்மண்: இடிந்த சுவர்!

தப்பி நிமிர்ந் தெழுந்தால்

 தலையிடிக்கும் தாழ் கூரை

மக்கி பழிந்து வரும்

 வறுமை வளர் சிறுகுடிசைப்

பக்கமதில் விளையாடும்

 பாலகனைப் பாரீரோ:

கந்தலொரு கோவணமே!

 கண்டவுடல்; மற்றும் அனல்

சிந்தும் வெயில் கடுங் குளிரே

 சிறுவனுக்கு மேற் போர்வை;

சிரங்கு சொரியுங் கை;

 செம்பட்டை யானதலை;

உறங்கி விழுங் கண்கள்;

 உலர்ந்த சிறு கன்னங்கள்

குந்தியவ னுட்கார்ந்து

 கூவிடவே ஓடியங்கு

வந்த சிறுமி யவள்

 வரிசைதனைக் கேளிரே;

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/21&oldid=1359734" இலிருந்து மீள்விக்கப்பட்டது