பக்கம்:இளந்தமிழா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை விளையாட்டு


சிறுமியவள் அந்தச்

 சிறுவீட்டின் உள்ளிருந்து

உரைத்தாள் ஒரு சொல் தான்;

 'ஒடிவா, கஞ்சி குடி,


மண் வெட்டப் போகணுமாம்

  பண்ணையார் ஏசுகிறார்

இன்பமுள்ள விளையாட்டும்

  இதுவோ வெறிலையோ 
 

வாழ்க்கை தனிற்புகுந்து

  வல்லடிமை தான் செய்து

பாழ்த்த வயிற்றினுக்கே

  பசி தீர்த்து மாயுமுனர்
  

கள்ளமறி யாக்குழந்தைக்

 கற்பனையில் ஆண்டானாய் உள்ளமதில் எண்ணியவர்
  உவகையுற லாகாதோ?
  

துன்பத்திலே தோன்றித்

  தொழும்பே வடிவானோர்க்

கின்ப விளையாட்டும்

  இல்லையோ இவ்வுலகில்?

இந்த இழிந்த நிலை

 இன்னும் இருந்திடவோ

சொந்த அரசு வந்தும்

 துயர் களையத் 
           துணிவிலையோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/24&oldid=1359845" இலிருந்து மீள்விக்கப்பட்டது