பக்கம்:இளந்தமிழா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் குஞ்சு (ஆண் குயில் இனிமையாகப் பாடுகிறது. பெண் குயில் அதைக் கேட்டு இன்பத்தில் மூழ்கியிருக்கிறது. பாடுவதற்கும், அதைக் கேட்டு மகிழ்வதற்கும் அவை கற்றுக்கொண்டிருக்கின்றனவே ஒழியக் கூடு கட்ட அவை கற்றுக்கொள்ளவில்லை. முட்டையிடுகின்ற பருவத்திலே பெண் குயில் கள்ளத்தனமாகக் காக்கை யின் கூட்டிலே முட்டையைச் சேர்த்துவிடும். ஆண் குயிலும் அதற்குத் துணை புரிவதுண்டு. காக்கை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். அன்புடனே குஞ்சுகளைப் பேணி வளர்க்கும். ஆனால் அந்தக் குஞ்சுகள் தன்னுடையனவல்ல வென்று சிறிதே ஐயம் வந்துவிட்டாலும் தாயாகவிருந்த அந்த மூடக் காக்கை பேயாக மாறி அவற்றைக் கொத்திக் கொன்றுவிடும். அவ்வாறு கொத்துண்டு குருதிதோய வேப்பமரத்தடியில் இறந்து கிடந்த குயிற் குஞ்சொன்றைப் பார்த்தபோது இந்தப் பாடல் உருவாயிற்று.) கரும்பட்டுப் போன்றவுடல் கைவளராப் பூங்குஞ்சு விரும்பிக் கவிமகிழும் விண்பாட்டின் மெல்லரும்பு வாடிக் களையிழந்து வாய்திறந்து மாண்டிடவே மூடச் சிறுகாக்கை முனிந் தெழுந்து கொத்திற்றே? 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/29&oldid=1358732" இலிருந்து மீள்விக்கப்பட்டது