பக்கம்:இளந்தமிழா.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரி மணற்கோட்டை எத்தனையோ மனக்கோட்டை எத்தனையோ? அணிற் பிள்ளை களைப்போல ஆடல்களும் எத்தனையோ? கன்னிக் கவின் மாறாத காவிரிப் பூங் கவிப்பெண்ணே! என்னென்ன நினைப்புகளோ என்னென்ன ஆசைகளோ கொள்ளத் துணைபுரிந்தாய்; கூட்டின்பச் சுவையேறக் கள்ளமிலா உள்ளங்கள் கலந்திடவே நடம்புரிந்தாய். பத்துடனோ ரைந்தாண்டு பறந்துவிட்ட பின்னரின்று கத்து குயிற் குழலிசையின் களியோங்க நடக்கின்ற உன்றனைநான் காணவந்தேன்; உணர்ச்சியெலாம் மீண்டனவே. அன்றுகண்ட கன்னியடீ அதிலொன்றும் ஐயமில்லை. நந்தா எழில் அரசீ நாணமுடன் உடல்வளைத்துச் சிந்தா முறுவலுடன் செல்கின்றாய் காவிரியே! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/37&oldid=1358799" இலிருந்து மீள்விக்கப்பட்டது