பக்கம்:இளந்தமிழா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்

கருணை வாரிதியே கறைமிடற் றண்ணலே திருவருட் கென்றன் சிறுவிண் ணப்பம்: இப்பிறப் பதனிலோ எப்பிறப் பதனிலோ தப்பிநா னிழைத்த தவறுகள் எல்லாம் இன்றெனைச் சூழ்ந்துபே ரிடருற நகைத்து நின்றன; அதனால் நெஞ்சம் முறிந்தேன். மணமுடிந் தின்றுதான் மாதம்ஏ ழாயின. கணவருக் கென்மேல் கடுகத் தனையும் அன்பிலே; ஆனால் அவர்மே லிழுக்கிலை. தந்தை தாய் செய்த தொல்லை தாங்காது... பெற்றவர் மகிழவே பெண்எனைக் கொண்டனர். மற்றிதை யறிந்தும், மனம் அவர் கனிந்து காலக் கழிவினில் காதலென் மேற்கொளச் சாலவும் முயன்றேன்; தளர்விலா தவர்க்கு உகந்தன எல்லாம் ஓதுமுன் செய்தேன்; அகமலர்ந் தவரும் அடிமையை நோக்கிட அருளுவா யென்றுனை அண்டிநான் அழுதேன்! பெருகுமென் வினையால் ஒருபயன் காண்கிலேன்! ஒருகணம் எனையவர் உற்றுநோக் கிடினும், மறுகணம் உயிர்த்து வெறுவெளி நோக்குவார்; உளத்தினில் அழுந்தியே உருகிநின் றிடுவார் சுளித்தெனைப் பார்த்துச் சுடுசொல் கூறினும், கெஞ்சிய மொழியால் நெஞ்சினில் நிலைத்த விஞ்சிய துயரம் விலக்கிட முயலலாம்: மனப்பண் புடைமையால் வாய்விட் டுரையார்; புனப்புழுப் புகுந்த போதினைப் போலவே

            57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/59&oldid=1359816" இலிருந்து மீள்விக்கப்பட்டது