பக்கம்:இளந்தமிழா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சத்தியம்

காந்தி மகான் சாவாரோ

  காலனவரைத் தொடுமோ? சாந்தமுனி சாகவில்லை
  சத்தியமும் சாகாது; 

ஓருடலில் கட்டுண்டு

  உலவி வந்த மெய்ச்சுடர்தான் சீருடனே மாந்தர்களின்
  சிந்தையெலாம் நிறைந்ததுவே. காயமிது சத்தியமோ
  காந்தி யொன்றே சத்தியமே. காயமைந்து பூதத்தில்
  கலந்து மறைந்திடவும் காந்தியெனும் சத்தியந்தான் 
  காரீயக் குண்டேறிச் 

சிந்துங் குருதியினால்

  சிரஞ்சீவி யாயிற்றே. ஆண்டொருநூற் றைம்பதிந்த
  அவனியிலே வாழ்வனென்றார் ஆண்டுக் கணக்குகளை
  அழித்துலகம் உள்ளவரை 

வாழ வளர்ந்து விட்டார்

  வாழியவோ சத்தியமே. ஆழநினைந் தாலடிகள்
  அவனி உய்ய வந்தவராம் பாரதத்தின் விலங்ககற்றும்
  பணியவற்குப் பெரிதல்ல; பாரினிலோர் புதுநெறியைப்
  பரப்பிடவே காந்தி வந்தார்.
            62
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/64&oldid=1359810" இலிருந்து மீள்விக்கப்பட்டது