பக்கம்:இளந்தமிழா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாய் நீ

காட்சி

மலர்ந்தது முழுநிலா
எங்கே?
நீலக் கடலருகே நீண்டதொரு நிலாமுற்றம்
அங்கே.
சுருளும் அலைமுரலும் அரவக் குழைவினிலே
இனித்துாறும் அன்புச்சொல் இன்னமுது பருகையிலே
முருகன் மறைந்து நின்று முடியிட்ட பிணைப்பினிலே
விரிந்ததந்த வானப்பூ
நெஞ்சமொன்றாய் உயிர் ஒன்றாய்
நிலாமுற்றம் வீற்றிருந்து
தேன்பேச்சும் பேச்சில்லா மோனத் தெளிவுரையும்
கேட்டுவந்த முழுநிலவு மீட்டுமிங்கு பன்முறையும்
வந்துவந்து மறைந்திடவும் வாடிநின்றேன்-
இன்றுமிங்கு சிரித்தந்த வெண்ணிலவு
வந்து தழைத்ததுவே-அது என் மனத்துயருக் கிரங்காதோ?


வேண்டல்

வானத்துப் பொன் விளக்கே
(அன்று நீ என்)
வாய்ச்சொல்லுங் கேட்டாயே
நெஞ்சிற் கிளுகிளுத்த நினவெல்லாம் உணர்ந்தாயே


70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/72&oldid=1361421" இலிருந்து மீள்விக்கப்பட்டது